அதிரடி.. முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழைய தடை.. ஏன் தெரியுமா?

மாஸ்கோ: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதித்து அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. யாருக்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்னணியில் உள்ள காரணம் உள்ளிட்ட பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையே எல்லை பிரச்சனை இருந்தது. இதனால் உக்ரைன் அமெரிக்கா தலைமை வகிக்கும் நேட்டோ படையில் இணைய முடிவு செய்தது. இதற்கான நடவடிக்கையில் உக்ரைன் தீவிரமாக செயல்பட்டது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் உக்ரைன் கண்டுகொள்ளவில்லை.

இதனால் தான் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யா-உக்ரைன் இடையே பிரச்சனை முற்றியது. மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரஷ்யா மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கினார். 2002 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போரை தொடங்கினர்.

வான்வெளி தாக்குதல், தரைவழி தாக்குதலை ஆக்ரோஷமாக ரஷ்யா தொடர்ந்தது. இதையடுத்து உக்ரைன் ராணுவமும் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. ரஷ்யாவின் தாக்குதலில் அப்பாவிகளும், உக்ரைன் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். அதேபோல் உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த போருக்கு பல நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் போரை கைவிட கூறியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கேட்கவில்லை. இதனால் அந்த நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யா கோபமடைந்தது. மேலும் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே தான் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை பிரிட்டன், அமெரிக்க தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு வழங்கி வருகின்றனர்.

மேலும் ரஷ்யாவை எதிர்த்து சண்டையிடுவதற்கு தேவையான உதவிகளை உக்ரைனுக்கு வழங்கி வருகின்றனர். இதனை ரஷ்யா கடுமையாக எதிர்த்து வருகிறது. மேலும் தொடர்ந்து உக்ரைனுக்கு உதவினால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ரஷ்யா எச்சரித்து வருகிறது. இருப்பினும் கூட அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு செவிசாய்க்கவில்லை.

Ukraine Crisis: Russia bans entry to 500 americans including former US president Barack Obama

இந்நிலையில் தான் ரஷ்யாவுக்குள் நுழைய 500 அமெரிக்கர்களுக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தி உள்ளது. அதன்படி அமெரிக்காவுக்குள் நுழைய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் அமெரிக்க தூதர் ஜான் ஹன்ட்மேன் அமெரிக்க சபையின் அடுத்த தலைவர் என எதிர்பார்க்கப்படும் சார்லஸ் க்யூ ப்ரோன், அமெரிக்க செனட்டர்கள், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மேல், கோல்பர்ட், சேத் மியர்ஸ், உள்பட 500 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோபைடன் தலைமையிலான அரசு ரஷ்யாவுக்கு எதிராக சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உக்ரைன் போரால் கடந்த ஓராண்டாகவே அமெரிக்கா-ரஷ்யா இடையே கடும் மோதல் போக்கு உள்ள நிலையில் தற்போது மாஜி அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 அமெரிக்கர்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.