அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட, குறிப்பிட்ட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் தடை
உக்ரைன் போர் நடைபெற துவங்கியதை அடுத்து, அமெரிக்கா ரஷ்யாவிலுள்ள 100க்கும் மேற்பட்ட அமெரிக்காவின்
நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது.
மேலும் ரஷ்யாவுடனான சில மேற்கத்திய நாடுகளின் வணிக போக்குவரத்தை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
@afp
இதனால் தற்போது ரஷ்யா இரண்டாம் உலகப் போர் காலத்தை நினைவு படுத்தும் வகையில், தங்களது நாட்டுக்கான தேவைகளை நட்பு நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.
500 பேருக்கு தடை
இதனிடையே அமெரிக்காவின் இந்த செயலுக்கு ரஷ்யா பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட, 500 பேருக்கு ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 19ஆம் திகதி ரஷ்ய அரசின் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, ரஷ்யாவிற்கு எதிரான தவறான கருத்துகளை பரப்பி வரும், 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை என கூறியுள்ளது.
@GETTY
’அமெரிக்கா இதன் மூலம் ரஷ்யாவிற்கு செய்த துரோகங்களை நினைவு படுத்திக் கொள்ளட்டும்’ என ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மீது அவதூறு
இந்த 500 பேர்கள் கொண்ட பட்டியலில் தொலைக்காட்சி நெறியாளர், ஸ்டீபன் கோல்பர்ட் , ஜிம்மி கிம்மேல் மற்றும் செத் மேயர்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
@CNN
மேலும் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான சிஎன்என் பத்திரிகையின் நெறியாளர் எரின் பர்னெட் உட்பட, மேலும் சில அமெரிக்க பத்திரிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மீது தொடர்ந்து தவறான அவதூறுகளை பரப்பி வரும் அமெரிக்கர்களையும், உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கி வரும் அமெரிக்க நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளும் ரஷ்யா வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.