இளவரசர் வில்லியம் தனக்குக் கொடுத்த பரிசு ஒன்றைக் குறித்து இன்றைக்கும் தன் கணவரை கேலி செய்கிறாராம் கேட்!
அது என்ன பரிசு?
பல கணவர்கள், பல ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பிறகும், தன் மனைவிக்கு சரியான பரிசைக் கொடுக்கத் திணறுவதுண்டு.
கணவன் அன்பாக ஒரு சின்ன ரோஜாப்பூவை காதலுடன் கொடுக்க வேண்டும் என்று மனைவி எதிர்பார்க்கும் நேரத்தில், ஊருக்கே தெரியுமாறு பெரிய பரிசொன்றைக் கொண்டுவந்து கொடுத்து, பின்னர் அது மனைவிக்குப் பிடிக்கவில்லை என்பது தெரியவரும்போது அசடு வழியும் ஆண்கள் பல உண்டு.
Samir Hussein/WireImage
அதற்கு இளவரசர் வில்லியமும் விலக்கில்லை போல் இருக்கிறது.
இன்றும் கேலி செய்யும் கேட்
ஒருமுறை, தன் மனைவிகு பைனாக்குலர் ஒன்றைப் பரிசளித்தாராம் வில்லியம். பிறகுதான் அவருக்குத் தெரிந்திருக்கிறது, அது தன் மனைவிக்குப் பிடிக்கவில்லை என்று.
வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த வில்லியம், தன் மனைவி அந்த நாளை இன்னமும் மறக்கவிடமாட்டேன்கிறார் என்று கூறியுள்ளார்!
Getty Images