திரைப்பட பிரமோஷன் ஒன்றுக்காக நடிகை சுனைனாவைக் காணவில்லை என்பது போல் உருவாக்கப்பட்ட வீடியோ கிளிப்பிங்கால் போலீசார் இரவு பகலாக அவரைப் பற்றி விசாரித்து அலைந்து திரிந்தனர்.
காதலில் விழுந்தேன் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சுனைனா.
கடந்த இரண்டு நாட்களாக அவரைக் காணவில்லை என்பதுபோல் போலியான செய்தி கிளிப்பிங் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.
இதனை உண்மை என நம்பி பலரும் அந்த வீடியோவை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிரவே, விவகாரம் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் வரை சென்றது.
இதனையடுத்து அவர்கள் படப்பிடிப்பு தொடர்பாக சுனைனா சென்று வந்த எக்மோர், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
கடைசியில் அது சுனைனா நடித்து வரும் புதிய திரைப்படமான ரெஜினா என்ற படத்தின் புரமோஷனுக்காக எடுக்கப்பட்ட வீடியோ என படக்குழுவினர் விளக்கம் அளித்தனர்.