கோடைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என மக்கள் குதுகலமாகி விடுவர். ஆனால் கோடை வெயில் வாட்டி வதைக்கும். இதிலிருந்து தப்பிக்கவும், விடுமுறையை கொண்டாடவும் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடுவர். நீண்ட தூரப் பயணங்களுக்கு மக்கள் அதிகம் விரும்பக்கூடிய பொதுப் போக்குவரத்து ரயில்கள் தான்.
இந்திய ரயில்வே ஏற்பாடு
நடப்பாண்டில் இந்திய ரயில்வே எத்தகையை சேவையை வழங்கி வருகிறது என்பது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில், நடப்பாண்டு கோடையில் கூடுதல் பயணிகளை சமாளிக்கும் வகையில் நாட்டின் அனைத்து ரயில்வே மண்டலங்களும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்றன. மொத்தம் 380 சிறப்பு ரயில்கள் மூலம் 6,369 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கோடைக்கால சிறப்பு ரயில்கள்
இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 1,770 சேவைகள் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. மேற்குறிப்பிட்ட ரயில்களில் 25,794 முன்பதிவில்லாத பெட்டிகள், 55,243 ஸ்லீப்பர் பெட்டிகள். இதில் முன்பதிவில்லாத பெட்டிகளில் தலா 100 பேரும், ஸ்லீப்பர் பெட்டிகளில் தலா 72 பேரும் பயணிக்க முடியும். இந்த சிறப்பு ரயில்கள் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வணக்கம், பிகார், உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகின்றன.
மண்டல வாரியாக சேவை
தென்மேற்கு ரயில்வே மண்டலத்தை கருத்தில் கொண்டால் கர்நாடகாவில் 1,790 ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேற்கு ரயில்வே மண்டலத்தை எடுத்துக் கொண்டால் குஜராத்தில் 1,470 ரயில் சேவைகள் வழங்கப்படுகின்றன. தென் மத்திய ரயில்வே மண்டலத்தில் 784 ரயில் சேவைகளும், வடமேற்கு ரயில்வே மண்டலத்தில் 400 ரயில் சேவைகளும்,
எந்தெந்த வழித்தடங்கள்
கிழக்கு மத்திய ரயில்வேயில் 380 ரயில் சேவையும், வடக்கு ரயில்வேயில் 324 ரயில் சேவையும் அளிக்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் முதன்மையான வழித்தடங்கள் என்று எடுத்துக் கொண்டால் பாட்னா – செகந்திராபாத், பாட்னா – யஸ்வந்த்பூர், பரவுனி – முசாபர் நகர், டெல்லி – பாட்னா, நியூ டெல்லி – காட்ரா, சண்டிகர் – கோரக்பூர், ஆனந்த் விஹார் – பாட்னா,
கூடுதல் ரயில்களுக்கு ஏற்பாடு
விசாகப்பட்டினம் – பூரி – ஹௌரா, மும்பை – பாட்னா, மும்பை – கோரக்பூர் ஆகியவற்றை சொல்லலாம். சிறப்பு ரயில்கள் என்பது தேவைக்கேற்ப மாறுதல்களுக்கு உட்படும். அப்படி பார்த்தால் நடப்பாண்டிலும் கூடுதல் ரயில் சேவைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்திய ரயில்வே சிறப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பு தெரிவித்திருக்கிறது.