சென்னை: தெற்கு ரயில்வே இந்த ஆண்டு கோடை காலத்தில் வழக்கதத்தை விட அதிக அளவு சிறப்பு ரயில்களை இயங்குகிறது.கோடைக் காலத்தை முன்னிட்டு 50 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. ஆனாலும் ரயில்களில் இடம் கிடைப்பது இல்லை.
ஆயிரம் பேருக்கு ஒரு ரயில் என ஒரு மாவட்டத்திற்கு ஒரு ரயில் என்று கணக்கிட்டால் கூட சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு எத்தனை ரயில்கள் தேவை என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள் . குறைந்தது ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வாழ்க்கிறார்கள். சென்னை மற்றும் புறநகரில் மட்டும் 2 கோடி பேர் இருப்பார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டடங்களைச் சேர்ந்தவர்கள். சரியான ரயில் போக்குவரத்து வசதிகள் இல்லை.
கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து இயக்கி வருகிறது. ரயில்கள் போதவில்லை என்கிற போதிலும், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஏராளமான ரயில்களை இயக்கி உள்து.
கோடைக் காலத்தில் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே 380 சிறப்பு ரயில்களில் 6,369 முறை பயணங்களுக்காக இயக்குகிறது. 2022-ல் இயக்கப்பட்ட மொத்த கோடைக் கால சிறப்பு ரயில்களுடன் (4599 பயணங்கள் 348 ரயில்கள்) ஒப்பிடும்போது, ரயில்வே இந்த ஆண்டு 1770 முறை கூடுதலாகவே பயணங்களுக்காக ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
இந்த சிறப்பு ரயில்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கி உள்ளது. குறிப்பாக வடமாநிலத்தவர் அதிக அளவில் தென்இந்தியாவிற்கு வரும் வகையில் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. பாட்னா – செகந்திராபாத், பாட்னா – யஸ்வந்த்பூர், பரௌனி – முசாபர்பூர், டெல்லி – பாட்னா, புதுடெல்லி – கத்ரா, சண்டிகர் – கோரக்பூர், ஆனந்த் விஹார் – பாட்னா, விசாகப்பட்டினம் – புரி – ஹவுரா, மும்பை – பாட்னா, மும்பை – கோரக்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது,.
அதபோல் தெற்கு ரயில்வேயில் 50 சிறப்பு ரயில்கள் மூலம் 244 பயணங்கள் இயக்கப்படுகிறது. தாம்பரம் – நெல்லை, தாம்பரம் – செங்கோட்டை, எழும்பூர் – கன்னியாகுமரி, எழும்பூர் – நாகர்கோவில், எழும்பூர் – வேளாங்கன்னி, திருவனந்தபுரம் – மங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
கச்சிகுடா (ஹைதராபாத்) – நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரயில் வரும் 26-ம் தேதி முதல் இயக்கப்படும் என அண்மையில் தெற்கு ரயில்வே அறிவித்தது. ஹைதரபாத் நகரில் (கச்சிகுடா ரயில் நிலையம்) இருந்து திருப்பதி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலுக்கு வரும் 26-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மார்க்கமும் 6 முறை இயக்கப்பட உள்ளதாக அறிவித்தது.
முன்னதாக தாம்பரம்- திருநெல்வேலி சிறப்புக் கட்டண சிறப்புக் கட்டண ரயில், ஏப்ரல் 27, மே 4, 11, 18ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பைச் சென்றடைந்தது. இந்த ரயில் மே 25ம் தேதியும் தாம்பரத்தில் இருந்த நெல்லை வரை இயக்கப்பட உள்ளது.
இதேபோல் நாகர்கோவில்-தாம்பரம் சூப்பர்பாஸ்ட் சிறப்புக் கட்டண ரயில் ( வண்டி எண்: 06012), நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஏப்ரல் 23, 30, மே 7 14 ஆகிய தேதிகளில் இயக்கப்பட்டது. வரும் மே 21, 28, ஜூன் 4, 11, 18, 25 மற்றும் ஜூலை 2 (ஞாயிற்றுக்கிழமைகளில்) மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு தாம்பரம் சென்றடைந்து, மறுநாள் காலை 4.10 மணி க்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்து.
வண்டி எண்: 06011: தாம்பரம் – நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்புக் கட்டண கோடை சிறப்புக் கட்டண ரயில் சேவை, மே 22, 29, ஜூன் 5, 12, 19, 26 மற்றும் ஜூலை 3 (திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 8.55 மணியளவில் நாகர்கோவில் சென்றடைகிறது. இந்த ரயில் ஏப்ரல் மாதத்தில் இருந்தே இயங்கி வருகிறது.
திருநெல்வேலி- சென்னை எழும்பூர் சிறப்புக் கட்டண ரயில் (வண்டி என்: 06022: ) திருநெல்வேலியில் இருந்து மே 26 (வெள்ளிக்கிழமைகளில்) மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்
திருவனந்தபுரம்- சென்னை எழும்பூர் சிறப்புக் கட்டண ரயில் (வண்டி எண்: 06044) திருவனந்தபுரத்தில் இருந்து மே 24, 31, ஜூன் 7, 14, 21, 28 (புதன்கிழமைகளில்) இரவு 7.40 மணிக்குப் புறப்பட்டு, 12.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. ஏற்கனவே இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூர்- திருவனந்தபுரம் சூப்பர்பாஸ்ட் சிறப்புக் கட்டண கோடை சிறப்பு ரயில் வண்டி எண்: 06043 மே 25, ஜூன் 1, 8, 15, 22 மற்றும் 29 (வியாழன்) ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்குப் புறப்பட்டு, அடுத்த நாள் காலை 6.45 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடைகிறது.
தாம்பரம்- திருநெல்வேலி சிறப்புக் கட்டண ரயில் (வண்டி எண்: 06031), தாம்பரத்தில் இருந்து மே 24 (புதன்கிழமை) இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது.
வண்டி எண்: 06032: திருநெல்வேலி-தாம்பரம் சிறப்புக் கட்டண ரயில், திருநெல்வேலியில் இருந்து மே 25 (வியாழன்) மதியம் 1.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.50 மணிக்கு தாம்பரம் சென்றடையும். வண்டி எண்: 06039: தாம்பரம்- நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்புக் கட்டண ரயில் மே 26ம் தேதி (வெள்ளிக்கிழமை தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
எண்.06040 நாகர்கோவில்- தாம்பரம் சூப்பர்பாஸ்ட் சிறப்புக் கட்டண ரயில், நாகர்கோவிலில் இருந்து மே 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. மேலே சொன்ன சிறப்பு ரயில்கள் எல்லாமே ஏப்ரல் மாதத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகிறது. தினசரி ஒரு சிறப்பு ரயில் என்கிற முறையில் நாகர் கோவில், திருநெல்வேலிக்கு தாம்பரத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.