ஊட்டி தமிழக சுற்றுல்லத்துறையின் மூலமாக ரூ.1500 கோடி வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கா ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தலைமை வகித்தார். விழாவின் சிறப்பு விருந்தினர்களான நீலகிரி எம்.பி. ஆ.ராசா, சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர். அமைச்சர் கா.ராமச்சந்திரன் தனது உரையில், “கடந்த 2 ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தில் 349 […]