சென்னை : மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் 84வது பிறந்த நாள் இன்று இவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
சினிமா என்றாலே பெரும் செலவாகும் என்ற கூற்றை உடைத்ததும் பாலு மகேந்திரா தான்.
அதே போல, கதாநாயகி என்றாலே வெள்ளை நிறத்தில்தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியை உடைத்து புதுமைப்படுத்தியவரும் இவர் தான்.
பாலு மகேந்திரா : அவரின் 84வது பிறந்த நாளில் அவரைப்பற்றி சில குறிப்புகளை பார்க்கலாம். தமிழ் திரையுலகின் பாதையை மாற்றிய ஜாம்பவான்களில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. இவரின் பிறந்த தினம் இன்று. 1931ம் ஆண்டு மே 20ந் தேதி, இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இவருடைய இயற்பெயர் மகேந்திரா.
லண்டனில் படித்தார் : இவரது தந்தை பாலநாதன் ஒரு சிறந்த கணித ஆசிரியர் ஆவார். பாலு மகேந்திரா தனது ஆரம்ப கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் பயின்று, லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1969 இல் தங்கப்பதக்கம் பெற்றார்.
ஒளிப்பதிவாளராக : The brife of river kwai என்ற படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்பட்ட போது, சிறுவனாக இருந்த பாலு மகேந்திரா அதைப்பார்த்தார். அதன் பிறகே பாலு மகேந்திராவிற்கு சினிமா மீது ஒரு காதல் ஏற்பட்டது. பாலு மகேந்திராவின் டாக்குமெண்டரி படத்தைப்பார்த்த செம்மீன் படப்புகழ் ராமு காரியத் அவரது ‘நெல்லு’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய பாலு மகேந்திராவை அழைத்தார். அப்படத்துக்கு 1972இல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருதை பெற்றார்.
தனி பாணி : தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்த பாலு மகேந்திரா, ஒளிப்பதிவில் தனக்கு என்று தனிபாணியை அமைத்துக்கொண்டார். இசை ஒளியை அதிகமாக இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். 1977ம் ஆண்டு பாலு மகேந்திரா அவரது முதல் படமான ‘கோகிலா’வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலருமாகும்.
5 மொழிகளில் : தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளில் 23 திரைப்படங்களை இயக்கினார் பாலு மகேந்திரா.அவர் இயக்கிய படங்கள் யதார்த்தத்தையும் இயல்பையும் பதிவு செய்து, நிஜவாழ்க்கைக்கும் மிக நெருக்கமான படங்களாக இருந்தன. சினிமாவிற்கான பாலுமகேந்திராவின் பங்களிப்பு திரையுலகம் இருக்கும் வரை என்றும் எப்போதும் நினைவு கூறப்படும்.