தேசிய மட்ட தடகள போட்டிகளில் பதக்கங்களை சுவீகரித்த யாழ்.மாணவர்கள்(Photos)


கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள போட்டிகள், யாழ்ப்பாணத்தின் தியகம ராஜபக்ச மைதானத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

பருத்தித்துறை

இந் போட்டியில்,பருத்தித்துறை – ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்களைச் சுவீகரித்துள்ளனர்.

இதில் ஹாட்லிக் கல்லூரி மாணவனான தருண் 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் 31.60 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

Hadlick College

அத்துடன் ஆர்.சஞ்சய் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் 31.91 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

பொலிகண்டி

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடரில் பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்த ஸ்ரீதரன் ஐங்கரன் வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

Polikandi Hindu Tamil Kalavan School

இதில் 16 வயதுப் பிரிவினருக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் ஸ்ரீதரன் ஐங்கரன் 27.45 மீற்ரர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

நெல்லியடி

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள போட்டியில் சம்மட்டி எறிதலில் நெல்லியடி மத்திய கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த விஷ்ணுப்பிரியன் வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

Nelliady Central College

இதில் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் விஷ்ணுப்பிரியன் 29.13 மீற்ரர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.