உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில், உக்ரைன் நாட்டின் சில பகுதிகளிலுள்ள கட்டிடங்களின் கூரைகள் பற்றி எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரில், ரஷ்யா உக்ரைன் மீது தொடர் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.
குறிப்பாக நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்படுவதால் உக்ரைன் ராணுவத்தால் ரஷ்ய ட்ரோன்களை சுட்டு வீழ்த்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
@reuters
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில், உக்ரைனின் மூன்று மாவட்டங்களில் மற்றும் கிய்வ் நகரிலும் ரஷ்ய விமானங்கள் எரிந்த நிலையில் கிடப்பதாக, உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நள்ளிரவில் தாக்குதல்
’டினிப்ரோவ்ஸ்கி மாவட்டத்தின் குடியிருப்பு வளாகங்களில் உள்ள ஒன்பது மாடிக் கட்டிடத்தின் கூரையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது’ என்று கெய்வ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ டெலிகிராமில் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
@reuters
ரஷ்யாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் திசை மாறி விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தினால், கட்டிடங்களின் மேற்கூரையில் தீ பற்றி எரிவதாக கிய்வ் நகரின் இராணுவ நிர்வாக தலைவர் செர்ஹி பாப்கோ தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவில் சரியாக 12.45 மணி அளவில் ரஷ்யாவின் ட்ரோன்கள், தொடர்ச்சியாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அதிகரிப்பு
இதனிடையே உக்ரைன் நகரமான செர்னிகிவ், மேலும் கிய்வ் நகரின் தெற்கு பகுதியில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@afp
மேலும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதிகளான மரியாபோலில் உள்ள சில பகுதிகளில், ட்ரோன்கள் தாக்கியதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் வான்வெளி பாதுகாப்பை அதிகப்படுத்தவுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.