பயணத்தின் போது பயணிகளுக்கு இருக்கும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று பயணச் சாமான்களை எடுத்துச் செல்வது. அதுவும் விமானத்தில் செல்வதானால் லக்கேஜ் கட்டணம் அதிகம் செலுத்தவேண்டிவரும். அதனால், சில பயணிகள் அதைத் தவிர்க்க வேறு வழிகளைப் பயன்படுத்துவதும் உண்டு.
அவரின் முகத்துக்கும், உடல் தோற்றத்துக்கும் சம்பந்தமில்லாமல் இருந்திருக்கிறது. இதனால் அவர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும், அவரை சோதனை செய்ததில் அவர் 6 அடுக்கு உடைகளை அணிந்திருந்தது தெரியவந்தது. லக்கேஜ் கட்டணப் பிரச்னையைச் சரிசெய்வதற்காக அவர் இவ்வாறு செய்ததாக விளக்கமளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து விமான நிலைய நிர்வாகம், விமானத்தின் கட்டண விதிமுறையை மீறியதால், அவருக்கு 13 பவுண்டுகள் அபராதம் விதித்தது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.