தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இதில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அந்த வகையில் அதிகபட்சமாக கரூர் பரமத்தி 106, வேலூர் 105, திருத்தணி மற்றும் ஈரோடு தலா 104, திருச்சி, மதுரை, மதுரை விமான நிலையம் தலா 103, சென்னை மீனம்பாக்கம் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.