இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற இருசக்கர வாகனங்களில் ஏப்ரல் மாதந்திர முடிவில் முதல் 10 இடங்களை பிடித்த பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனை நிலவரத்தை அறிந்து கொள்ளலாம்.
முதலிடத்தில் வழக்கம் போல ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் வரிசை விற்பனை எண்ணிக்கை 2,65,235 பைக்குகளும், 2,46,016 எண்ணிக்கையை பதிவு செய்து இரண்டாமிடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரும் உள்ளது. மூன்றாவது இடத்தில் பல்சர் வரிசை பைக்குகள் 1,15,371 எண்ணிக்கையை பதிவு செய்து இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.
Top 10 Selling Two Wheeler – April 2023
தொடர்ந்து நாட்டின் முதன்மையான தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் மற்றும் HF டீலக்ஸ் என இரு பைக்குகளும், ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் பைக் மற்றும் ஆக்டிவா ஸ்கூட்டரும் உள்ளது.
டாப் 10 இருசக்கர வாகனம் | ஏப்ரல் 2023 | ஏப்ரல் 2022 |
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் | 2,65,235 | 2,34,085 |
2. ஹோண்டா ஆக்டிவா | 2,46,016 | 1,63,357 |
3. பஜாஜ் பல்சர் | 1,15,371 | 46,040 |
4. ஹோண்டா ஷைன் | 89,261 | 1,05,413 |
5. ஹீரோ HF டீலக்ஸ் | 78,700 | 1,00,601 |
6. டிவிஎஸ் ஜூபிடர் | 59,583 | 60,957 |
7. சுசூகி ஆக்செஸ் | 52,231 | 32,932 |
8. பஜாஜ் பிளாட்டினா | 46,322 | 39,136 |
9. டிவிஎஸ் அப்பாச்சி | 38,148 | 7,342 |
10. டிவிஎஸ் XL100 | 34,925 | 38,780 |
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் எக்ஸ்எல்100, ஜூபிடர் மற்றும் அப்பாச்சி என மூன்று மாடல்கள் டாப் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளது. சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் விற்பனை அபரிதமான வளர்ச்சி அடைந்து வருகின்றது.