கடந்த ஏப்ரல் 2023 மாதாந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை பெற்ற ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனை நிலவரத்தை அறிந்து கொள்ளலாம்.
முதலிடத்தில் வழக்கம் போல ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா விற்பனை 2,46,016 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இரண்டாமிடத்தில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் 59,583 எண்ணிக்கையில் உள்ளது. மூன்றாவது இடத்தில் சுசூகி ஆக்செஸ் 52,231 எண்ணிக்கையை பதிவு செய்து இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.
டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஏப்ரல் 2023
டாப் 10 | ஏப்ரல் 2023 | ஏப்ரல் 2022 |
1. ஹோண்டா ஆக்டிவா | 2,46,016 | 1,63,357 |
2. டிவிஎஸ் ஜூபிடர் | 59,583 | 60,957 |
3. சுசூகி ஆக்செஸ் | 52,231 | 32,932 |
4. டிவிஎஸ் என்டார்க் | 26,730 | 25,267 |
5. ஒலா | 21,882 | 12,708 |
6. ஹீரோ ஜூம் | 11,938 | – |
7. யமஹா பர்க்மேன் | 10,335 | 9,088 |
8. யமஹா ரே இசட்ஆர் | 9,945 | 5,778 |
9. ஏதெர் 450X | 6,746 | 3,694 |
10. யமஹா ஃபேசினோ | 6,300 | 3,896 |
குறிப்பாக, இந்த பட்டியலில் ஹோண்டா நிறுவனத்தின் டியோ ஸ்கூட்டர் வெளியேறியுள்ளது. மேலும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை பெற்ற ஜூம் ஸ்கூட்டர் இடம் பெற்றுள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களான ஓலா, ஏதெர் 450X ஆகியவை இடம்பெற்றுள்ளது.