கர்நாடகாவில் இன்று சித்தராமையா, டி.கே.சிவகுமார் உடன் 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.
கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்கிறார். பெங்களூருவில் மிக பிரமாண்டமாக பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடகா முதலமைச்சர் விவகாரம் முடிவுக்கு வந்தது. காங்கிரஸ் தலைமையிடம் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இருவரும் இன்று மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் நடைபெறும் விழாவில் பதவி ஏற்க உள்ளனர். இந்த பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
அதே போல், முக்கிய கட்சிகளின் தலைவர்கள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் என மிக பிரமாண்டமாக விழா நடைபெற உள்ளது. இதையடுத்து, கன்டீரவா மைதானத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடை மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று முதல்வர், துணை முதல்வருடன் அமைச்சரகளாக பதவி ஏற்க உள்ளவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, பரமேஸ்வரா, முனியப்பா, ஜார்ஜ், பாட்டீல், சதீஷ் ஜர்கிகோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, சமீர் அகமத் கான் ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.
newstm.in