முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டரில், எதிர்பார்த்த ஒன்று நடந்திருக்கிறது. மத்திய அரசு/ ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொண்டது. இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ள வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. பணப்பரிமாற்ற விஷயத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அரிதாகவே பிரபலமாக இருந்தது. இவை பரிமாற்றத்திற்கு சரியான தொகை அல்ல. இதைத் தான் கடந்த நவம்பர் 2016ல் நாங்கள் கூறினோம். அது உண்மை என்று தற்போது நிரூபணமாகி இருக்கிறது. 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை ஒழித்து
எனப்படும் முட்டாள்தனமான நடவடிக்கையை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த நோட்டுகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவும், அதிகம் புழக்கத்திலும் இருந்தன. இவற்றுக்கு பேண்ட்-எய்ட் போடுவது போல 2,000 ரூபாய் நோட்டுகளை கட்டுக் கட்டாக கொண்டு வந்தனர். பணமதிப்பிழப்பு அறிவிப்பின் சில வாரங்களுக்கு பின்னர், மீண்டும் 500 ரூபாய் நோட்டுகளை கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு/ ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டது. மீண்டும் 1,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஒருவழியாக பணமதிப்பிழப்பு விவகாரம் முழு சுழற்சியை நிறைவு செய்துள்ளது என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.