இத்தாலியில் அமெரிக்கவைச் சேர்ந்த பெண் ஒருவர் வெறும் 3 யூரோக்களுக்கு மூன்று வீடுகளை வாங்கியுள்ளார்.
இத்தாலியில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் கைவிடப்பட்ட மூன்று வீடுகள் வெறும் 3 யூரோக்களுக்கு விற்பனைக்கு வருவது தெரிந்த, அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 49 வயதான ரூபியா டேனியல்ஸ் (Rubia Daniels) என்ற பெண் அவற்றை சாதுரியமாக வாங்கியுள்ளார்.
கைவிடப்பட்ட மூன்று வீடுகளையும் அவர் 2019-ல் வாங்கினார். தொலைதூரப் பகுதிகளில் அமைந்துள்ள வெறிச்சோடிய கிராமங்களை மீண்டும் குடியமர்த்துவதற்காக குறைந்த விலையில் இந்த சொத்துக்களை இத்தாலிய அரசாங்கமே வழங்குகிறது.
Rubia Daniels/Facebook
டேனியல்ஸ் இதைக்கேட்டு வியப்படைந்ததாகவும், அது உண்மையா என்பதை அறிய ஆர்வத்துடன் இத்தாலிக்கு பயணத்தை மேற்கொண்டதாகவும் கூறினார்.
உடனடியாக விமான டிக்கெட், இத்தாலியில் வாடகை கார் மற்றும் ஹோட்டலை முன்பதிவு செய்து புறப்பட்டு சென்றார்.
ஜூலை 2019-ல் சிசிலியில் உள்ள ஒரு சிறிய கிராமமான முசோமெலிக்கு தனது 10 நாள் சுற்றுப்பயணத்தின் முடிவில் மூன்று கைவிடப்பட்ட வீடுகளை அவர் தலா 1 யூரோ மட்டுமே கொடுத்து வாங்கியுள்ளார்.
Rubia Daniels/Facebook
அந்தப் பெண் இப்போது முசோமேலியில் தனக்குச் சொந்தமான மூன்று கட்டிடங்களில் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு திட்டங்களைக் கொண்டுள்ளார்.
முதல் வீட்டை இத்தாலிக்கு செல்லும் போதெல்லாம் வசதியாக தங்குவதற்கு பயன்படுத்துவேன் என்று டேனியல்ஸ் கூறினார்.
இரண்டாவது வீட்டை,பொது மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு கலைக்கூடமாக மாற்றப்படும் என்றும் மூன்றாவது வேட்டை ஒரு ஆரோக்கிய மையமாக புதுப்பிக்கப்படும் என்றும் அதற்கான சீரமைப்பு பணிகளை செய்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Rubia Daniels/Facebook
2019-லேயே வீடுகளின் பழுதுபார்க்கும் பணியைத் தொடங்கினார், ஆனால் COVID-19 தொற்றுநோய் காரணமாக தாமதமானதாக கூறுகிறார்.
தற்போது, முதல் இரண்டு கட்டடங்களின் முகப்புப் புனரமைப்புப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன.
Rubia Daniels/Facebook
இவ்வளவு குறைந்த விலையில் சொத்து வாங்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2021-ஆம் ஆண்டில், சிசிலியில் உள்ள மற்றொரு நகரம் “காஸ்டிக்லியோன் டி சிசிலியா” என்று அழைக்கப்படும் வீடுகளை ஒரு காபியின் விலைக்கு சமமான விலையில் விற்கப்பட்டதாக செய்திகள் செவிலியாகின.
சிசிலியா நகரத்தால் பட்டியலிடப்பட்ட 900 கைவிடப்பட்ட வீடுகள் அதன் பழமையான சில பகுதிகளில் அமைந்துள்ளன. 900 வீடுகளில் பெரும்பாலானவை பாழடைந்ததால், அவர் 1 யூரோ விலையில் விற்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிகின்றன.