இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
பல மாதங்களாக சோதனையில் இருந்துவந்த Apple ios 16.5 வெர்ஷன் தற்போது வெளியாகியுள்ளது. இன்னும் சில மாதங்களில் WWDC 2023 நிகழ்ச்சியில் ios 17 வெளியாகும். இதில் உள்ள வேறு சில வசதிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதிய Apple News
இனி Apple News பக்கத்தில் புதிதாக Sports page ஒன்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. இதனால் இனி பயனர்கள் அவர்களுக்கு பிடித்தமான அணிகள், தொடர்கள் போன்றவற்றை பின்பற்றி உடனடியாக போட்டிகள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். கூடுதலாக இதில் Sports Card இடம்பெறும். அதனால் நேரடியாகவே நமக்கு பிடித்தமான பக்கங்களை தனியாக வைத்துக்கொள்ளலாம்.
புதிய வகை Celebration Wallpapers
LGBTQ+ மக்களை கவுரவப்படுத்தும் விதமாக புதிய Pride Celebration Wallpaper ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய Wallpaper உங்களின் ஐபோனின் Lock Screen மற்றும் Home Screen என இரண்டிலும் புதிய அனிமேஷன் வசதிகளுடன் பயன்படுத்தலாம்.
Iphone 14 வெறும் 45 ஆயிரம் விலையில்! நம்பமுடியவில்லையா? அமேசான் தரும் சலுகை!
மற்றவை
இந்த புதிய அப்டேட் மூலம் Spotlight பிரச்சனை, Apple Car Play பயன்படுத்தும்போது ஏற்படும் பிரச்சனை, Screen Time மாறுவது போன்ற பிரச்சனை சரிசெய்யபட்டுள்ளது. இதேபோல Siri மூலம் ஸ்க்ரீன் ரெகார்ட் செய்யும் வசதி இதில் இடம்பெறவில்லை.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய Assistive feature வசதியை விரைவில் அதன் ios 17 அறிமுகத்தில் வெளியிடும் என்று அறிவித்துள்ளது. மேலும் இதில் புதிதாக Personal Voice அசிஸ்டன்ட் ஒன்றை பயன்படுத்தலாம். அதாவது நமது குரலை நமது Personal Assistant குரலாக மாற்றலாம்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்