வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: ஏக்நாத் அமைச்சரவையில் அமைச்சர் பதவி பெற்றுதருவதாக பா.ஜ.,எம்.எல்,.ஏக்களை ஏமாற்றிய பலே குஜராத் நபர் ஒருவரை நாக்பூர் போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மகாவிகாஷ் அகாடி கூட்டணியின் முதல்வராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே இருந்து வந்தார். பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் சிவசேனாவில்இருந்து பிரிந் து சென்ற ஏக்நாத்ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றார். துணை முதல்வராக பா.ஜ.,வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார்.
இந்நிலையில் ஏக்நாத் அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெற பா.ஜ.,எம்.எல்.ஏக்களுக்கு ஆசை இருந்து வந்துள்ளது. இதனை குஜராத் மாநிலம் மோர்பி பகுதியை சேர்ந்த நீரஜ் சிங் ரத்தோட் என்பவர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்.
சம்பந்தப்பட்டரத்தோட் பா.ஜ. எம்.எல்.ஏக்கள் மூன்று பேரை தொடர்பு கொண்டு பாஜ., தேசிய தலைவர் ஜே.பி.,நட்டாவின் தனிப்பட்ட உதவியாளர் போல் காட்டிக்கொண்டு ஏமாற்றி உள்ளார்.
இவரின் நடவடிக்கையை கண்காணித்துவந்த நாக்பூர் போலீசார் அவரை கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 28 க்கும் மேற்பட்டோர் நீரஜ்சிங் ரத்தோரிடம் தொடர்பு கொண்டு இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மத்திய அரசின் வீட்டு வசதி திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பங்களிப்பை வழங்குவதாக டில்லி பாஜக எம்.எல்.ஏ.,வையும் ரத்தோட் ஏமாற்றிவிட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement