ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் எக்ஸ்ட்ரீம் 160R பைக்கில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் நிறங்கள் சேர்க்கப்பட்ட 2023 மாடல் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள பல்சர் NS160, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V , ஜிக்ஸர் 155, மற்றும் யமஹா FZ-S, பல்சர் N160 உள்ளிட்ட 150-160cc வரையில் உள்ள பல்வேறு மாடல்களை எதிர்கொண்டு வருகின்றது.
2023 Hero Xtreme 160R
ஹீரோ தனது இணையதளத்தில் புதிய நிறங்களை இணைத்துள்ள நிலையில், மேம்பட்ட வசதிகள் கொண்ட மாடல் குறிப்பாக முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனுக்கு பதிலாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் யூஎஸ்டி ஃபோர்க் மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்தப்படியாக, Xtreme 160R பைக்கில் திருத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் கூடுதல் அம்சங்களையும் பெற வாய்ப்புள்ளது. புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் மோட்டார்சைக்கிளை அதிக வாடிக்கையாளர்களை கவரும் தோற்றமளிக்க புதிய டூயல் டோன் பெயிண்ட் நிறங்களை பெற வாய்ப்புள்ளது.
இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டிருக்கும்.
2023 மாடலில் தொடர்ந்து ஏர் கூல்டு 163cc சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பெற்று 8,500 Rpm-ல் அதிகபட்சமாக 15 bhp பவர் மற்றும் 6,500-rpmல் 14Nm டார்க் கொண்டு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்திருக்கும்.
ஆரம்பகட்டத்தில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் சிறந்த வரவேற்பை பெற்ற நிலையில், மேம்பாடுகள் தற்பொழுது கொண்டு வரப்பட்டால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஹீரோ எதிர்பார்க்கின்றது.
-
XTREME 160R SINGLE DISC – ₹ 1,19,161
-
XTREME 160R DOUBLE DISC – ₹ 1,22,511
-
XTREME 160R STEALTH – ₹ 1,24,301
-
XTREME 160R STEALTH 2.0 – ₹ 1,30,133
(Ex-showroom Tamil Nadu)