ஸ்கிராம்பளர் ஸ்டைலை பெற்றுள்ள ஹோண்டா CL300, CL250 மற்றும் CL500 என மூன்று மாடல்கள் சீன சந்தையில் கிடைக்கின்ற நிலையில், இந்தியாவில் இந்த பைக்கிற்கான டிசைன் வடிவமைப்பிற்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளதால், இங்கேயும் அறிமுகம் செய்யப்படலாம்.
சர்வதேச அளவில் விற்பனையில் கிடைக்கின்ற ரீபெல் பைக்கின் சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள CL500, CL300, CL250 மாடல்களின் அடிப்படையிலான பைக்கிற்குதான் டிசைன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Honda CL300 Scrambler
ரீபெல் 300 க்ரூஸ் பைக்கில் இருந்து பெறப்பட்ட என்ஜினை பெற்ற சிஎல்300 ஸ்கிராம்பளரில் 286cc சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 25.7hp பவர் வழங்குகின்றது. இதில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த மாடலின் இருக்கை உயரம் 790mm மற்றும் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 165mm மற்றும் 172 கிலோ எடை கொண்டதாகும்.
ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற டயர் வழங்கப்பட்டு முன்புறத்தில் 19-இன்ச் வீல் மற்றும் பின்புறத்தில் 17-இன்ச் வீல் வழங்கப்பட்டுள்ளது. இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
CL250 மாடலில் 249cc என்ஜின் பெற்றதாக உள்ளது. இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற CB350 மற்றும் CB350RS பைக்குகளில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை புதிய ஹோண்டா ஸ்கிராம்பளர் மாடல் பயன்படுத்திக் கொள்ளுமா என தெரியவில்லை.
இந்தியாவில் விற்பனையில் உள்ள ஹண்டர் 350, வரவிருக்கும் ட்ரையம்ப்-பஜாஜ் ஸ்கிராம்பளர் ஆகியவற்றுடன் ஜாவா, யெஸ்டி பைக்குகளையும் எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.
புதிய ஹோண்டா CL300 ஸ்கிராம்பளர் பைக் எப்பொழுது இந்திய சந்தைக்கு வரும் என்ற உறுதியான தகவல் தற்பொழுது கிடைக்கவில்லை. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பிரீமியம் மாடலை அறிமுகம் ஹோண்டா திட்டமிட்டிருக்கின்றது.