Indias Sharp Response As China Opposes G20 Meet In Kashmir | காஷ்மீரில் ஜி20 மாநாடு: சீனா எதிர்ப்புக்கு இந்தியா பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: காஷ்மீரில் ஜி20 மாநாட்டை நடத்துவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, தனது சொந்த மண்ணில் எந்த இடத்திலும் மாநாட்டை நடத்துவதற்கு உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இதன் அடிப்படையில் இந்த அமைப்பின் மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. சுற்றுலாத்துறை தொடர்பான மாநாடு, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நாளை மறுதினம் முதல் 24 ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜி20 அமைப்பை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு, நடக்கும் முதல் சர்வதேச மாநாடு இதுவாகும். இதனையடுத்து, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்ப்பு

latest tamil news

இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், பிரச்னைக்குரிய பகுதியில் ஜி20 மாநாட்டை எந்த வடிவிலும் நடத்தினாலும் அதனை சீனா எதிர்க்கும். இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

பதிலடி

இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, எங்களது சொந்த மண்ணில் எந்த இடத்திலும் மாநாட்டை நடத்துவதற்கு உரிமை உண்டு. எல்லையில் சமாதானம் மற்றும் அமைதி நிலவினால் மட்டுமே, சீனாவுடனான உறவு சீராக இருக்கும் எனக்கூறியுள்ளது.

இதனிடையே, காஷ்மீரில் நடக்கும் மாநாட்டை புறக்கணிக்க துருக்கி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சவுதி அரேபியாவும் இதுவரை பதிவு செய்யவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.