சென்னை நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள்.
தமிழ், தெலுங்கு, இந்தியில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.
இவர் கன்னடத்தில் கில்லி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானாலும், தெலுங்கில் தான் கொடி கட்டி பறக்கிறார்.
அடுத்த படங்களில் : நடிகை ரகுல் ப்ரீத் சிங் யுவன் படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார். தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரன் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ள ப்ரீத் சிங், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், டைரக்டர் விஜய் இயக்கும் லேடீஸ் நைட், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அனைத்து மொழியில் பிஸி : தமிழில் மட்டுமல்ல இந்தி, தெலுங்கிலும் பிஸியான நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், 2013ம் ஆண்டு வெளியான வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து தெலுங்கில் ஹிட் கொடுத்தார். அதன் பின் தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த பிரீத்சிங் மகேஷ் பாபுக்கு ஜோடியாக ஸ்பைடர் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இணையத்தில் சுறுசுறுப்பு : சினிமாவில் மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமிலும் சுறுசுறுப்பான நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங். இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் ஃபோட்டோக்கள், வீடியோக்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவியும். ஒவ்வொரு பதிவும் குறைந்தபட்சம் 2 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை பெற்று டிரெண்டிங்கில் இருக்கும்.

நடுவுல கொஞ்சம் ஆடைய காணோம் : நடிகை ரகுல் ப்ரீத் சிங் மைனஸ் 15 டிகிரி குளிரில் வெறும் பிகினி உடையை அணிந்துக் கொண்டு ஐஸ் நதியில் துணிச்சலாக குளியல் போட்ட வீடியோவை ஷேர் செய்திருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் வாயடைத்து திகைத்துப்போனார்கள். தற்போது, ரகுல் ப்ரீத் தனது இன்ஸ்டாகிராமில், ஆரஞ்சு நிற உடையில் தனது சிறுத்த இடையை காட்டி இளசுகளை சூடேத்தி உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடுவுல கொஞ்சம் ஆடைய காணோம் என கிண்டலடித்து வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.