வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், 58 வது வயதில், 3வது மனைவி மூலம் 8 வது குழந்தைக்கு தந்தையாக உள்ளார்.
போரிஸ் ஜான்சனுக்கும், முன்னாள் மனைவியான மரினா வீலருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். பிறகு, காதலி ஹெலன் மூலம் மற்றொரு குழந்தைக்கும் போரிஸ் ஜான்சன் தந்தையானார்.
பிறகு, 2018 ம் ஆண்டு முதல் கேரி சைமண்ட்ஸ் உடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2020 ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2021ல் இவர்களுக்கு மற்றொரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
கேரி சைம்ண்ட்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ‛‛ எங்கள் குடும்பத்தில் இன்னும் ஓரிரு வாரத்தில் புதிய உறுப்பினர் இணைந்துவிடுவார். கடந்த 8 மாதங்களாக மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். என்ன குழந்தை பிறக்க போகிறது என்பதில் குழந்தைகள் ஆர்வமாக உள்ளனர் ” எனக்கூறியுள்ளார்.
இதனையடுத்து போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி சைமண்ட்ஸ் தம்பதிக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement