Yamaha E-01, Neo’s electric scooter – யமஹா E01, நியோஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வருகை விபரம்

இந்திய சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் யமஹா தனது முதல் நியோஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியிட வாயுப்புகள் உள்ளது.

சமீபத்தில் 2023 யமஹா நியோ பேட்டரி மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்நிறுவனத்தின் மற்றொரு மாடலான E01 ஸ்கூட்டரினை ஜப்பானில் வாடகை வாகனமாக அறிமுகம் செய்துள்ளது.

 2023 Yamaha Neo’s electric scooter details

Yamaha Neo’s Escooter

யமஹா நியோஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டிரன்னிங் விளக்குடன் நவீன ஸ்டைலிங் அம்சத்தை பெற்றுள்ளது. எல்இடி டெயில் லேம்ப் பொருத்தப்பட்டு நேரத்தியான தோற்றத்தை பின்புறத்திலும் வழங்கியுள்ளது.

நியோஸ் மின்சார ஸ்கூட்டர் சர்வதேச சந்தையில் 50cc ஸ்கூட்டருக்குச் சமமானதாக உள்ளது. இதில் 2.03kW மோட்டாருடன் இணைக்கப்பட்ட நீக்கும் வகையிலான இரண்டு லித்தியம்-அயன் பேட்டரி மூலம் அதிகபட்சமாக 70 கிமீ பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று யமஹா கூறுகிறது. இருப்பினும், அதன் அதிகபட்ச வேகம் 40kmph மட்டுமே ஆகும். ஸ்கூட்டரின் சராசரி சார்ஜிங் நேரம் சுமார் 8 மணிநேரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Yamaha E-01 Electric Scooter

ஜப்பானிய சந்தையில் E01 மேக்ஸி ஸ்டைல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரத்தியேகமாக வாடகைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4.9 kWh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு 8.1 kW (10.86 bhp) பவர் வழங்குகின்ற பிரஷ்லெஸ் DC மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது.

 2023 Yamaha e-01 electric scooter

யமஹா E01 ஸ்கூட்டரினை சார்ஜ் செய்தால் 104KM தொலைவு செல்லும் என்று உறுதியளிக்கிறது. இந்த மாடலை வீட்டு  சார்ஜர் சாக்கெட்டில் இருந்து பேட்டரியை சார்ஜ் செய்ய சுமார் 14 மணிநேரம் ஆகும்.

யமஹா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் உள்ள டீலர்களுக்கு நியோஸ் மற்றும் E01 என இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்சிப்படுத்தியதால் இந்தியாவில் அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது.  இந்தியாவில் E01 மற்றும் EC-05 என்ற இரு மாடல்களுக்கான வர்த்தக முத்திரைகளையும் பதிவு செய்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில், யமஹா தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை 100-125 km ரேஞ்சு கொண்டதாக ரூ.1.50 லட்சத்திற்குள் அறிமுகம் செய்யலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.