அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏமாற்றம்… கவுன்சிலிங் ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். அந்த வகையில் 2022-23ஆம் கல்வியாண்டிற்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த வாரம் தொடங்கியது. இந்த சூழலில் உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் நாளை (மே 22) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி மாநிலம் தழுவிய அளவில் உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் வெளியானது. இந்நிலையில் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.