சீனாவின் மிரட்டல்கள், ஆக்ரமிப்புகள் இடையே இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பும் வெற்றியும் உலகம் முழுவதற்கும் அவசியமானது என்று குவாட் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பேனேசி, ஜப்பான் பிரதமர் ஃபூயுமோ கிஷிடா ஆகியோர் முன்னிலையில் உரை நிகழ்த்திய மோடி, சர்வதேச வர்த்தகம் மற்றும் கூட்டுறவுக்கு எஞ்சினாக விளங்கும் இந்தோ பசிபிக்கின் வெற்றி உலகம் முழுவதற்கும் அவசியமானது என்றார்.
நமது கூட்டு முயற்சியால் சுதந்திரமான இந்தோ பசிபிக் வர்த்தகம் சாத்தியமாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2024ம் ஆண்டில் குவாட் மாநாட்டை இந்தியாவில் நடத்துவோம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.