கணினி மயமாகும் கிராம ஊராட்சிகளில் நாளை முதல் ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டணங்கள் பெறப்படும் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் செலுத்தும் வரி அனைத்தும் நாளை முதல் ஆன்லைன் மூலமாக பெறப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தினுடைய ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்த இதன் மூலம் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் ஆன்லைன் மூல மட்டுமே செலுத்த வேண்டும் எனவும், கிராம ஊராட்சி களுக்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு விதமான அனுமதிகளையும் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்படும். கிராம ஊராட்சிகளில் வரிகளை செலுத்துவதற்கு tnrd.tn.gov.in என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று கிராம ஊராட்சிகளில் புதிய கட்டிடத்திற்கான அனுமதி பெற நாளை முதல் இணையதளம் மூலம் மட்டுமே அனுமதி வழங்கப்படும். புதிய கட்டிடங்களுக்கு அனுமதி பெற onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஊரகப் பகுதிகளில் புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க கிராம ஊராட்சி அலுவலருக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இனி எந்த ஒரு சேவைக்கும் கட்டணத்தை இணையதளம் மூலம் மட்டுமே பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.