ஐபிஎல் தொடரின் 15 ஆண்டு கால சாதனையை முறியடித்த 21 வயது பேட்ஸ்மேன்!!

ஐபிஎல் தொடரின் 66வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஜித்தேஷ் சர்மா 44 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கர்ரான் 49* ரன்களும், ஷாருக் கான் 41* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 187 ரன்கள் எடுத்தது.

இதன்பின் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பட்லர் டக் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான ஜெய்ஸ்வால் 50 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் வந்த தேவ்தத் படிக்கல் 51 ரன்களும், சிம்ரன் ஹெட்மயர் 46 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 19.4 ஓவரில் இலக்கை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தனது ப்ளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்து கொண்டது.

இந்த நிலையில், கடந்த போட்டிகளை போன்று இந்த போட்டியிலும் ராஜஸ்தான் அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்த ஜெய்ஸ்வால், இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல் ஒன்றையும் எட்டியுள்ளார்.

ஜெய்ஸ்வால் தன்னுடைய 18 வது வயதில் முதல்முறையாக விளையாடினார் அதில் மூன்று போட்டிகளில் விளையாடின் 40 ரன்கள் ஜெயிஸ்வால் அடித்தார் அதன் பிறகு 19 ஆவது வயதில் ஜெய்ஸ்வால், 10 போட்டிகளில் விளையாடி 249 ரன்களை அடித்தார். இதில் ஒரு அரை சதம் அடங்கும். இதனை அடுத்து கடந்த ஆண்டு மீண்டும் தனது திறமையை நிரூபித்த ஜெய்ஸ்வால் 10 போட்டிகளில் விளையாடி 258 ரன்கள் அடித்தார். இதில் இரண்டு அரை சதம் அடங்கும். எனினும் தன்னுடைய முழு திறமையையும் ஜெய்ஸ்வால் நடப்பு சீசனில் தான் வெளிக்காட்டி இருக்கிறார். இந்த சீசனில் ஜெய்ஸ்வால் ஒரு சதம் மற்றும் 5 அரை சதம் அடித்தது மட்டுமல்லாமல் 164 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரைட்டை வைத்திருக்கிறார்.

இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 657 ரன்களை அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 50 ஆகும். இந்த சீசனில் ஜெய்ஸ்வால் 87 பவுண்டரிகளையும், 26 சிக்ஸர்களையும் அடித்திருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 15 ஆண்டுகாலம் நீடித்த ஒரு ரெக்கார்டை ஜெய்ஸ்வால் முறியடித்திருக்கிறார். இதன் மூலம் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் படைத்திருக்கிறார்.

இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு ஷான் மார்ஸ் இந்த ரெக்கார்டை படைத்திருந்தார். தற்போது அதனை 21 வயதில் ஜெய்ஸ்வால் முறியடித்திருக்கிறார். ஷான் மார்ஸ் இந்த சாதனை படைத்திருக்கும் போது ஜெய்ஸ்வாலுக்கு வெறும் ஆறு வயது தான் இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிரடியாக விளையாடி வரும் ஜெய்ஷ்வாலை இந்திய அணியில் விரைவில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.