1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பழிக்குப் பழியாக நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கொலை, கலவரத்தைத்தூண்டியது, கூட்டம் சேர்த்தது, மதரீதியாக விரோதத்தை வளர்த்தது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் அந்த குற்றப்பத்திரிகையில் உள்ளன. டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், டெல்லி குருதுவாராவில் தாக்குதல் நடத்தியதாகவும் 3 சீக்கியர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.