கைது செய்யப்பட்டாரா அமிதாப் பச்சன் ?

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், மும்பையில் தான் கலந்துகொள்ள வேண்டிய படப்பிடிப்பிற்கு செல்வற்தாக காரில் சென்று கொண்டிருந்தார். போக்குவரத்து நெரிசல் காரணமாக உரிய நேரத்தில் படப்பிடிப்பிற்கு காரில் செல்ல முடியாது என்பதால் காரை விட்டு இறங்கி அந்த வழியாக வந்து இந்த ஒரு இருசக்கர வாகன ஓட்டியிடம் லிப்ட் கேட்டு ஏறி சென்றார். இது குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக வெளியானது.

பலரும் இந்த வயதிலும் அவர் கடைபிடிக்கும் நேரந்தவறாமை குறித்து பாராட்டினாலும் ஒரு சிலர் மட்டும் வழக்கம்போல குதர்க்கமாக, அந்த வாகனம் ஓட்டியவர் ஹெல்மெட் அணியவில்லை, கூடவே அமிதாப்பச்சனும் ஹெல்மெட் அணியவில்லை, அதனால் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா எனப கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த விஷயம் பிரச்னையாக அமிதாப்போ, ‛‛அது படப்பிடிப்பில் நிகழ்ந்த விஷயம்'' என கூறி சமாளித்தார்.

இந்த நிலையில் அமிதாப்பச்சன் ஒரு போலீஸ் வாகனத்தின் முன்பாக தான் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு “கைது செய்யப்பட்டேன்” (Arrested) என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கு எல்லாம் யாரையும் கைது செய்ய மாட்டார்கள், அபராதம் மட்டுமே விதிப்பார்கள் என்றும் இது தன்னை விமர்சித்த சில நெட்டிசன்களுக்காக அமிதாப் பச்சன் கிண்டலாக கொடுத்த பதிலடி என்றும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.