சீனா: காமெடி பண்ணதற்கு Fine போட்ட அதிகாரிகள்.. எவ்வளவு அபராதம்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
சீன காமெடி நிறுவனத்திற்கு அரசு 13 மில்லியன் யுவான் என்ற அளவில் அபராதம் விதித்துள்ளது.

‘டிரான்ஸ்பார்மர்ஸ்’ பட வரிசையில் ஜான் சீனா நடிக்கும் ‘பம்புல்பீ’ பட டிரைலர்!!

சீனாவின் ஷாங்காய் பெரு நகரத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது ஷாங்காய் ஷியோகோ கலாச்சார ஊடகம். ஸ்டேண்ட் அப் காமெடி என அழைக்கப்படும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்துவது, நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது என்பது அந்நிறுவனத்தின் பணிகளாகும். பல்வேறு ஸ்டேண்ட் அப் காமெடியன்களை உருவாக்கிய பெருமை இந்த நிறுவனத்திற்கு உண்டு. இந்தநிலையில் இந்த காமெடி நிறுவனத்திற்கு சீன அரசு 13.35 மில்லியன் யுவான் (சீனாவின் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.

சீனா என்பது கம்யூனிச கோட்பாடுகளால் உருவாக்கப்பட்ட அரசை கொண்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட முதலாளித்துவ அரசுகளால் தங்களது பொதுவுடமை கம்யூனிச சித்தாந்தங்களுக்கு ஆபத்து இருப்பதாக கருதி சீனாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளால் அந்நாட்டில் நிகழும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் சீன அரசால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டே வெளியுலகிற்கு தெரியவருகின்றன.

இந்தநிலையில் நகைச்சுவை என்ற பெயரில் சீன மக்கள் படையை (சீன ராணுவம்) கொச்சைப்படுத்தியதாக ஷியோகோ காமெடி நிறுவனத்திற்கு சீன கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை முகமை அபராதம் விதித்துள்ளது. கடந்த மே 13ம் தேதி ஷாங்காயில் நடைபெற்ற ஸ்டேண்ட் அப் காமெடி நிகழ்வில் வெளியிடப்பட்ட வீடியோவில், இரண்டு வளர்ப்பு நாய்கள் ஒரு அணிலை துரத்தும் வீடியோ வெளியிடப்பட்டு, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் புகழ்பெற்ற வாசகமான, ‘நல்ல வேலை அமைப்பை கொண்டு, போரிடவும் வெற்றியடைவும் தயார்படுத்திக் கொள்ளுங்கள்’ என்ற வாசகத்தை வீடியோவில் இணைந்து வெளியிட்டது சீனா முழுவதும் கடும் எதிர்ப்புகளை கிளப்பியது.

சமூக வலைதளங்களில் பேசு பொருளான இந்த வீடியோவைக் கண்ட கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள், ஷியோகோ நிறுவனத்தின் மீது அபராதம் விதித்துள்ளனர். நகைச்சுவை என்ற பெயரால் நாட்டின் ஆன்மாவை சிதைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், தேசத்தின் ராணுவத்தை இழிவுபடுத்துவதை அணுமதிக்க முடியாது எனவும் அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.

டொனால்ட் டிரம்ப்: ‘குழந்தைகள் மீது சத்தியம்’.. அந்த பெண்ணை பலாத்காரம் செய்யல.!

முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு பெண்கள் குறித்து இழிவாக பேசி காமெடி செய்ததாக கூறி 2 லட்சம் யுவான்கள் ஷியோகோ நிறுவனத்தின் மீது அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.