தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இதில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர் ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அந்த வகையில் அதிகபட்சமாக கரூர், மதுரை மற்றும் ஆகிய பகுதிகளில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.