சூடானின் உள்நாட்டு மோதலில் சுடப்பட்ட இந்தியரின் உடல் நேற்று வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது
சூடான் வன்முறையில் சுட்டு கொல்லப்பட்ட இந்தியர்
சூடான் தலைநகர் கார்டூமில் நடந்த உள்நாட்டு மோதலின் போது பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அலவேலை சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டியன் (48) உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது.
சனிக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் ஆல்பர்ட் அகஸ்டியன் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்து. அங்கு அவரது உறவினர்கள், நண்பர்கள், உள்ளூர் மக்கள் என ஏராளமானோர் வீட்டில் காத்திருந்தனர்.
mathrubhumi
சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
டெல்லியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலம் உடல் கொண்டுவரப்பட்டது.
9.30 மணியளவில் விமான நிலையத்திலிருந்து சடலம் எடுக்கப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சூடானில் உள்ள இந்திய தூதரகத்தின் தகவலின்படி, சி-17 விமானப்படை வெளியேற்றும் விமானத்தில் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது.
ஏப்ரல் 15 உயிரிழந்தார்
முன்னதாக, உயிரிழந்த இந்தியரைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்ட சூடானில் உள்ள இந்தியத் தூதரகம், “சூடானில் உள்ள டால் குழும நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியர் அல்பர்ட் அகஸ்டின், நேற்று தவறுதலாக புல்லட் தாக்கியதில் காயமடைந்து உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக ஏற்பாடுகளைச் செய்ய தூதரகம் குடும்பம் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது” என ட்விட்டரில் தெரிவித்தது
mediaoneonline
257 தமிழர்கள்
இதனிடையே, சூடானிலிருந்து இதுவரை 257 தமிழர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என வெளிநாடு வாழ் தமிழர் நலவாழ்வுத் துறை அமைச்சர் மஸ்தான் கூறியுள்ளார்.