ஜப்பான் ஜி7 மாநாடு: பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பில் நடந்தது என்ன?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ஜப்பானில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாடு தான் சர்வதேச அளவில் தலைப்பு செய்திகளில் ஒன்றாக காணப்படுகிறது. அதென்ன ஜி7 எனப் பலருக்கும் கேள்வி எழக்கூடும். உலகில் பொருளாதார ரீதியாக வளர்ந்த 7 நாடுகள் சேர்ந்து உருவாக்கிய அமைப்பிற்கு இந்த பெயரை வைத்துள்ளனர். இதில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

ஜி7 உச்சி மாநாடு

இவர்கள் பொருளாதார முன்னேற்றம், சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள், வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக முன்னெடுக்கும் விஷயங்கள் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் ஜி7 மாநாடு நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான மாநாடு ஜப்பானில் நடந்து வருகிறது.

சோலி முடிஞ்சு.. ரஷ்ய அதிபரின் அதிரடி முடிவு.. சொந்த நாட்டு அதிகாரிகளே கதிகலங்கும் நிலை.!

ஹிரோஷிமா நகரில் உலகத் தலைவர்கள்

குறிப்பாக இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டால் முழுவதுமாக அழிந்து, அதன்பிறகு வளர்ச்சியை எட்டி பிடித்து உலக அரங்கை ஆச்சரியப்படுத்திய ஹிரோஷிமா நகரில் ஜி7 மாநாடு நடக்கிறது. கடந்த 19ஆம் தேதி தொடங்கிய மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த ஜி7 அமைப்பில் இந்தியா அங்கம் வகிக்கவில்லை. அப்புறம் எப்படி பிரதமர் மோடி ஜப்பான் சென்றார் எனக் கேள்வி எழலாம்.

பிரதமர் மோடி பங்கேற்பு

ஒவ்வொரு மாநாட்டிலும் சிறப்பு விருந்தினர்களாக சில நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஜி7 நட்பு வட்டாரத்தில் இருக்கும் இந்தியா தொடர்ந்து பங்கேற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு வரும் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி தனியே ஆலோசனைகள் மேற்கொண்டு வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் உடன் சந்திப்பு

தென்கொரிய அதிபர் யூன் சுக் யுயேல், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூலா, வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், குக் தீவுகளின் பிரதமர் மார்க் ப்ரவுன் ஆகியோரை சந்தித்து பேசினார். இதற்கிடையில் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் சிலை திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இனி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இலங்கை.. ஆளுநராக பொறுப்பேற்ற தமிழர்.. ஆடிப்போன சீனா.. என்ன நடந்தது?

இந்தியா – பிரிட்டன் நல்லுறவு

ரிஷி சுனக் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். இவருடைய மாமனார் இன்போசிஸ் நாராணமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா – பிரிட்டன் இடையிலான உறவு என்பது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதுவும் பிரதமர் மோடி ஆட்சியில் நட்புறவு மேலும் வலுவடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் ரிஷி சுனக் உடனான சந்திப்பில் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், புதிய தொழில்நுட்பம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் இணக்கமான போக்கு தொடர்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மிகவும் பயனுள்ளதாக இந்த சந்திப்பு அமைந்தது என்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.