நயன்தாராவின் புது பிஸ்னஸ் பிளான்.. சினிமாவை தாண்டி பணம் குவியும் தொழில்கள்!

சென்னை : நடிகை நயன்தாரா சென்னையில் பிரபல தியேட்டர் ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாரா தனது அழகாலும், திறமையான நடிப்பாலும் அதிகமான ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டவர்.

இவரது நடிப்பால் வியந்து போன ரசிகர்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என செல்லாமாக அழைத்து வருகின்றனர்.

ஜவான் படத்தில் : நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளுக்கும் அம்மாவாகிவிட்டார். தற்போது நயன்தாரா ஜவான்,இறைவன் போன்ற படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

பணம் தரும் பிஸ்னஸ் : தமிழ் சினிமாவை பொருத்தவரை திருமணமாகிவிட்டால் அந்த நடிகைக்கு மார்க்கெட் குறைந்துவிடும் என்பதால் நிலையான ஒரு வருமானத்தை ஏற்படுத்திக்கொள்ள பல பிஸ்னஸ்களை நயன்தாரா செய்து வருகிறார். அதில் முதலாவதாக துபாயில் எண்ணெய் சம்பந்தப்பட்ட தொழிலில் 50 கோடி முதலீடு செய்துள்ளார்.

பல பிஸ்னஸில் முதலீடு : இதையடுத்து அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தில் தி லிப் பாம் கம்பெனி போன்ற தொழில்களில் ஈடுபட்டு அதன் பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார். இந்த நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்ததாக இந்தியாவில் மிகப் பிரபலமான “சாய் வாலே”என்ற தேநீர் கடையில் முதலீடு செய்து உள்ளார்.

பிரபல தியேட்டரை வாங்கினார் : தற்போது நயன்தாரா வட சென்னை பகுதியில் இயங்கி வந்த பழமையான அகஸ்தியா தியேட்டரை சொந்தமாக வாங்கி உள்ளதாகவும், அந்த இடத்தில் புதிதாக அதிநவீன வசதிகளுடன் கூடிய மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை கட்ட திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான வேலைகள் அனைத்தும் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. நயன்தாரா சினிமாவில் சம்பாதித்த பணத்தை நல்ல லாபம் தரும் தொழிலில் முதலீடு செய்துவிட்டு குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ திட்டம்போட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.