பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கி வரவேற்ற பப்புவா நியூ கினி பிரதமர்

பப்புவா நியூ கினி: இந்திய – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் (எஃப்ஐபிஐசி) 3-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பப்புவா நியூ கினிக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை அந்த நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப்பே காலை தொட்டு வணங்கி வரவேற்றார்.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி -7 அமைப்பின் உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து இந்திய – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் (எஃப்ஐபிஐசி) 3-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி பப்புவா நியூ கினி நாட்டுக்கு சென்றுள்ளார்.

நாளை நடக்க இருக்கும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொகுத்து வழங்க இருக்கிறார். பப்புவா நியூ கினி நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விமானம் மூலம் பப்புவா நியூ கினி வந்தடைந்த பிரதமர் மோடியை அந்த நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப்பே விமானம் நிலையம் சென்று வரவேற்றார். அப்போது அவர் பிரதமர் மோடியில் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற முயன்றார். அவரை தடுத்த பிரதமர் மோடி, அவரை ஆரத் தழுவிக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பப்புவா நியூ கினியில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு எந்த நாட்டு தலைவருக்கு சம்பிரதாய வரவேற்பு தரப்படுவதில்லை. ஆனால் இந்த விதியை பிரதமர் மோடிக்காக அந்நாட்டு அரசாங்கம் தளர்த்தியுள்ளது. நாளை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி டோக் பிசின் (Tok Pisin) மொழியில் திருக்குறள் நூலை வெளியிடுகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.