முதல்வர் சித்தராமையா முதல்வராக பதவியேற்ற உடனே 5 உத்தரவாதங்கள் அமல்..?

கர்நாடக சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டன. அவற்றில், தேர்தலையொட்டி மக்களுக்கு 5 உத்தரவாதங்களை காங்கிரஸ் கட்சி அளித்து இருந்தது. அவையாவன, கிரக ஜோதி எனப்படும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம், கிரக லட்சுமி எனப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கும் ரூ.2,000 வழங்குதல், அன்ன பாக்யா எனப்படும் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி, யுவ நிதி திட்டத்தின் கீழ் வேலையில்லாதோருக்கு 2 ஆண்டுகளுக்கு அலவன்ஸ் தொகை (பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500) வழங்குவது, சக்தி எனப்படும் திட்டத்தின் கீழ் கர்நாடகா முழுவதும் மகளிருக்கு இலவச பஸ் பயணம் ஆகிய 5 உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக டி.கே. சிவக்குமார் ஆகியோர் முறைப்படி நேற்று பதவியேற்று கொண்டனர். கவர்னர் தாவர்சந்த் கெலாட் முறைப்படி அவர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் ஆகியவற்றை செய்து வைத்து உள்ளார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் வழங்கிய 5 உத்தரவாதங்கள் மந்திரி சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, அவற்றை அமல்படுத்துவதற்கான உத்தரவு உடனே பிறப்பிக்கப்படும் என அறிவித்து உள்ளார். இந்த உத்தரவாதங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை செலவாகும் என கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.