
மெடிக்கல் த்ரில்லர் படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஜெயராம்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன், ரம்யா நம்பீசன் நடிப்பில் 'அஞ்சாம் பாதிரா' என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மிதுன் மானுவேல் தாமஸ் என்பவர் இயக்கிய இந்தப்படம் தொடர் கொலைகளை செய்யும் ஒரு சைக்கோ கொலைகாரனையும், ஒரு கிரிமினாலஜிஸ்ட் எப்படி இந்த கொலைகாரனை கண்டுபிடிக்கிறார் என்பதையும் பற்றிய திரில்லர் படமாக உருவாகி இருந்ததால் இந்தப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் இயக்க உள்ள புதிய படத்தில் நடிகர் ஜெயராம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்தப்படத்திற்கு ஒஸ்லர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் மெடிக்கல் திரில்லர் ஜேனரில் உருவாக இருக்கிறது.
நடிகர் ஜெயராம் கடந்த வருடத்தில் இருந்து இப்போது வரை பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தில் தனது திரையுலக பயணத்தை ஓரளவு ஸ்டெடியாக தொடர்ந்து வருகிறார். ஆனால் மலையாளத்தில் இவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வி படங்களாகவே அமைந்து வருகின்றன,. இந்த நிலையில் தற்போது நடிக்க உள்ள இந்த படம் மூலம் மீண்டும் மலையாளத்தில் தனக்கான இடத்தை ஜெயராம் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.