சென்னை: அஜித்தின் ஏகே 62 படத்தின் டைட்டில் விடாமுயற்சி என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.
லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் இயக்குநராக மகிழ் திருமேனி கமிட்டாகியுள்ளார்.
அஜித் பைக் டூர் சென்றுள்ளதால், அவர் சென்னை திரும்பியதும் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்பட்டது.
ஆனால், அஜித் சென்னை திரும்பிவிட்டாலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என சொல்லப்படுகிறது.
விடாமுயற்சி ஷூட்டிங் அப்டேட்
துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். ஏகே 62 படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவரது ஸ்க்ரிப்ட் லைகாவுக்கு செட்டாகவில்லை என்பதால் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.
இதனையடுத்து அஜித்தின் ஏகே 62 பட டைட்டில் அப்டேட் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. அதன்படி, ஏகே 62 படத்துக்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகியுள்ளார். இதுதவிர வேறு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் தொடங்கும் என சொல்லப்பட்டது.
நேபாளம், பூடான் நாடுகளுக்கு பைக் டூர் சென்றிருந்த அஜித் சென்னை திரும்பியதும் படப்பிடிப்பை தொடங்க மகிழ் திருமேனி திட்டமிட்டிருந்தார். மேலும், மொத்த படப்பிடிப்பும் 70 முதல் 90 நாட்களுக்குள் முடித்துவிட வேண்டும் என மகிழ் திருமேனி ஷெட்யூல் செய்துவிட்டாராம். ஆனால், சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள லைகாவின் அலுவலகங்களில் திடீரென அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சட்டவிரோத பண பரிமாற்ற புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அஜித்தின் விடாமுயற்சி ரஜினியின் லால் சலாம், தலைவர் 170, கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.
இந்த திடீர் சோதனையால் லைகா நிறுவனத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கவும் தாமதமாகும் எனக் கூறப்படுகிறது. அஜித் தனது பைக் ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டு அவசரமாக சென்னை திரும்ப, இப்போது லைகாவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், விடாமுயற்சி ஷூட்டிங் தள்ளிப்போவது குறித்து அபிஸியலாக எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
அதேநேரம் இந்தப் படத்திற்காக அஜித் தனது கெட்டப்பை மாற்ற முடிவு செய்துள்ளாராம். கடந்த சில வருடங்களாகவே தான் நடித்த படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வருவதை வழக்கமாக வைத்துள்ளார் அஜித். ஆனால், இந்தப் படத்தில் அஜித்தின் லுக் வேற லெவலில் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஒருபக்கம் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய், அதிரடியாக தனது தளபதி 68 பட அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர்.