திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் ஜூன் 3 கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் கடந்த 14ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக நடந்தது.
மக்களவை தேர்தல் 2024அதில் 5 முக்கியமான விஷயங்களை கட்சியினருக்கு அறிவுறுத்தியிருந்தார். மாவட்ட செயலாளர்கள் சரியாக செயல்பட வேண்டும், தவறு நடந்தாலோ அல்லது ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றாலோ அதிரடி மாற்றம், உழைக்கும் நபர்களுக்கே இடம், மக்களவை தேர்தலுக்கு இலக்கு நிர்ணயம், கூட்டணி கட்சியினருக்கு ஒத்துழைப்பு ஆகியவற்றை எடுத்துரைத்தார். இந்த சூழலில் 2024 மக்களவை தேர்தலுக்கு தயாராக பல்வேறு ஏற்பாடுகளை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
சீக்ரெட் சர்வேதேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அதிருப்தி எதுவும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். திமுக அரசு செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல மாவட்டந்தோறும் சிறப்பு கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தனியார் அமைப்பு ஒன்றின் மூலம் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து கருத்துக்கணிப்பு நடத்த உத்தரவிட்டிருந்தார்.
திமுகவின் தேர்தல் முடிவுகள்அதில், 35 இடங்களில் திமுகவிற்கு வெற்றி, 4 இடங்களில் இழுபறியாக இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. இது உற்சாகம் அளிக்கக்கூடிய செய்தியாக இருந்தாலும் தமிழகம், புதுச்சேரி என 40 மக்களவை தொகுதிகளும் திமுக வசம் வர வேண்டும். இழுபறியாக இருக்கும் தொகுதிகளில் என்ன சிக்கல்? அதை சரிசெய்வது எப்படி? என ஆராய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் எழுந்த ஆடியோ சர்ச்சை, கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்டவை மக்கள் மத்தியில் அதிருப்தியாக மாறாமல் பார்த்து கொள்வது அவசியம்.
சபரீசனுக்கு முக்கிய டாஸ்க்இந்நிலையில் ஒட்டுமொத்த வெற்றிக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யுங்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் கறாரான உத்தரவை பிறப்பித்துள்ளார். ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் கவனிக்க தனி ஏற்பாட்டை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சமூக வலைதளப் பிரச்சாரங்களுக்கு சபரீசன் தலைமையில் இயங்கும் குழுவை தீவிரம் காட்ட சொல்லியிருக்கிறார்.
பிரசாந்த் கிஷோர் டீம்இந்த குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் அனைவரும் பிரசாந்த் கிஷோரின் சிஷ்யர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்கள் தான் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து திமுகவிற்காக செயல்பட்டு வருகின்றனர். இவர்களை கொண்டு டிஜிட்டல் முறையில் திமுகவை முன்னெடுத்து சென்று வாக்குகளை கவர ஸ்டாலின் கணக்கு போட்டு வைத்துள்ளார்.
தேர்தல் வியூகங்கள்இதற்காக 3சி ஸ்வீட் பாக்ஸ்களை இறக்கி விட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் தற்போது முதல் களப்பணியில் தீவிரம் காட்டினால் தான் சரியாக இருக்கும் என திமுக தலைமை கணித்துள்ளது. அதற்கேற்ப வியூகங்களும் தயாராக இருக்கின்றன. இவற்றை படிப்படியாக நடைமுறைப்படுத்துவது மட்டும் தான் பாக்கி.