வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: சீனாவில், உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை தீவிரமடைந்துள்ளது. கடந்த, ஆறு ஆண்டுகளில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
நம் அண்டை நாடான சீனாவின் ஜின்ஜியாங்க் மாகாணத்தில், சிறுபான்மையினரான உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தீவிரமாக உள்ளன. மறுகல்வி முகாம் என்ற பெயரில், இந்த முகாம்களில், உய்குர் முஸ்லிம்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு கடுமையான தண்டனைகள், பேச்சு சுதந்திரம் ரத்து, மொபைல்போன் பயன்படுத்த தடை, மத சம்பிரதாயங்கள் மேற்கொள்ள தடை என, கொடுமைபடுத்தப்படுவதாக பல ஆய்வுகள் தெரிவித்துஉள்ளன.
இதற்கு ஐ.நா., மனித உரிமை கமிஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சீனாவுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், ‘அடக்குமுறைக்கு எதிரான குரல்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இனப்படுகொலை, மனிதகுலத்தின் மீதான தாக்குதலில் மிகவும் மோசமானதாகும். மத நம்பிக்கைகளை தொடரக் கூடாது, கட்டாய கருக்கலைப்பு, கட்டாய குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் என, அந்த மக்கள் கொடுமைபடுத்தப்படுகின்றனர். சீன அரசு திட்டமிட்டு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த, ஆறு ஆண்டுகளில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement