வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பவுரி: உத்தரகண்ட் மாநிலத்தில் மாற்று மதத்தை சேர்ந்த நபருடன் நடக்க இருந்த பா.ஜ.,தலைவரின் மகளின் திருமணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பா.ஜ., தலைவர்களில் ஒருவர் யாஷ்பால் பெனாம். தற்போது பவுரி மாநகராட்சி தலைவராக உள்ள இவர் முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஆவார். இவரது மகள் மாற்று மதத்தை சேர்ந்த நபரை காதலித்து வந்தார் அதனை ஏற்றுக்கொண்ட யாஷ்பால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். வரும் 28 ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக பத்திரிகை அச்சடிக்கப்பட்டது. சமூக வலை தளங்களிலும் வைரலானது.
திருமண பத்திரிகை வெளியான நிலையில் விஷ்வஹிந்துபரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பியும், உருவ பொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து யாஷ்பால் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தந்தையாக என் மகளின் காதலை ஏற்றுக்கொண்டேன். நான் ஒரு மக்கள் பிரதிநிதி மற்றும் தலைவர் என்பதால், எனது பொறுப்பும் எனது மக்களுக்கு உள்ளது. மகிழ்ச்சியான மற்றும் இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்பதற்காக திருமணத்தை தற்காலிகமாக ரத்து செய்வது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மணமகன் குடும்பத்தினரின் பரஸ்பர சம்மதத்துடன், இரு குடும்பத்தினரும் திருமண சடங்குகளை இப்போதைக்கு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. என கூறினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில் என் மகள் காதல் என்னைப் பொறுத்தவரை நியாயமானது … (மாப்பிள்ளை குடும்பத்தினர் நல்ல மனிதர்கள், அவர்கள் மாற்று மதத்தினர் என்பதற்காக அவர்களை புறக்கணிப்பது நல்ல விஷயம் அல்ல. இந்த திருமணத்தை நடத்த வேண்டாம் என பலர் எச்சரித்தனர், இதனால் எனது அரசியல் வாழ்க்கை ஆபத்தில் முடியும் என்றனர் ஆனால், எனக்கு எனது மகளின் மகிழ்ச்சி முக்கியம், எனது அரசியல் வாழ்க்கை தனி இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement