ஜலந்தர்,-பஞ்சாபில், இந்தியா – பாக்., எல்லையில், நம் அண்டை நாடான பாகிஸ்தான், ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் வாயிலாக போதைப் பொருள், ஆயுதங்களை கடத்தி வருகிறது.
இந்நிலையில், பஞ்சாபில், பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் நேற்று சுட்டு வீழ்த்தினர்.
இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள உதார் தரிவால் கிராமத்திற்கு அருகே, ட்ரோன் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இதே போல், ரத்தன் குர்த் கிராமத்தில் பறந்த ட்ரோனும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதிலிருந்து, 2.6 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்றாவதாக சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன், பாக்., எல்லையில் விழுந்ததால் அதை மீட்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement