Thalapathy 68: வெளியானது தளபதி 68 அறிவிப்பு: விஜய், வெங்கட் பிரபு, யுவன், ஏஜிஎஸ், பெரிய பட்ஜெட்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Thalapathy 68 announcement: தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் விஜய்.

​தளபதி 68​தளபதி 68 படத்தை அவர் இயக்குவார், இவர் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் அதை வெங்கட் பிரபு இயக்குவது உறுதியாகிவிட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியாகிவிட்டது. அந்த அறிவிப்பு வீடியோவை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் விஜய்.
சைந்தவி​என்னோடு Best Friend ஜி.வி​
​அறிவிப்பு​தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க, அவரின் தம்பி யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது என்பதை அந்த வீடியோவில் சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளனர். இது ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் 25 படமாகும். மீண்டும் விஜய்யை வைத்து படம் தயாரிப்பது தங்களின் கவுரவம் என தெரிவித்துள்ளது ஏ.ஜி.எஸ். நிறுவனம்.
தளபதி​View this post on InstagramA post shared by Vijay (@actorvijay)​
​வெங்கட் பிரபு​அதிகாரப்பூர் அறிவிப்பு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு கனவுகள் நினைவாகும். கடவுள் மிகவும் அன்பாக இருக்கிறார் என வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார். மேலும் அந்த வீடியோவை யுவன் ஷங்கர் ராஜாவும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தளபதி 68 பற்றி விஜய் ட்வீட்டியதை பார்த்த வெங்கட் பிரபு நன்றி அண்ணா என தெரிவித்துள்ளார்.
​ஏஜிஎஸ்​தளபதி 68 படம் குறித்து ஏ.ஜி.எஸ். நிறுவனம் தெரிவித்திருப்பதாவது, மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க, இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றவுள்ளார். பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைகிறது. தளபதி 68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏஜிஎஸ்-ன் 25வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.