சென்னை: Vijay (விஜய்) விஜய்யின் ஹேர் ஸ்டைல் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது இணையத்தி விவாதமாகியுள்ளது.
விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பிய படக்குழு சென்னையில் விறுவிறுப்பாக ஷூட்டிங்கை நடத்திவருகிறது. ஜூன் முதல் வாரத்தில் ஷூட்டிங் முடிந்துவிடும் என கருதப்படுகிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகும் லியோ அக்டோபர் மாதம் 19ஆம் தேதி உலகம் முழுவது திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
தளபதி 68: லியோ படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. தெலுங்கு இயக்குநர் இயக்குவார் என கூறப்பட்ட சூழலில் வெங்கட் பிரபு இயக்குவார் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25ஆவது படமாக இந்தப் படம் உருவாகவிருக்கிறது. முதல்முறையாக வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருக்கின்றனர்.
பல வருடங்களுக்கு பிறகு: ஹீரோக்களுக்கு தரமான இசையை வழங்கக்கூடிய யுவன் ஷங்கர் ராஜா கடைசியாக புதிய கீதை படத்துக்கு விஜய்க்காக இசையமைத்திருந்தார். அதற்கு பிறகு இரண்டு பேருமே இணையவில்லை. தற்போது வெங்கட் பிரபு படத்தின் மூலம் அது சாத்தியமாகியுள்ளது. எனவே, விஜய்க்கு எந்த மாதிரியான இசையை யுவன் ஷங்கர் ராஜா வழங்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.
தலைமுடியில் பிரச்னை: இதற்கிடையே விஜய்யை அவருடைய ஹேர் ஸ்டைலை வைத்து சிலர் கிண்டலடித்துவருகின்றனர். அதாவது, விஜய் விக் வைத்திருக்கிறார் என பலரும் கூறும் சூழலில் விஜய்யின் ரசிகர்கள் அதனை தீவிரமாக மறுத்துவருகின்றனர். சமீபத்தில் மனோபாலா இறப்புக்கு வந்தபோதுகூட விஜய்யின் தலைமுடி குறித்த விவாதம் எழுந்தது. இந்தச் சூழலில் பயில்வான் ரங்கநாதன் விஜய்யின் முடி குறித்து பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
என்ன பேசினார் பயில்வான்?: இதுகுறித்து அவர் பேசுகையில், “விஜய் கடந்த ஏழு ஆண்டுகளாக படங்களில் விக் வைத்துதான் நடித்துவருகிறார். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இன்னமும் முடி நன்றாக இருக்கிறது. விஜய்க்கு எதனால் தலைமுடி உதிர்ந்தது என்றால், ரசாயன கலவை கலந்த கெமிக்கல் ஷாம்பூக்களை பயன்படுத்துகிறார். ஷாம்பூ பயன்படுத்தியதால்தான் எனக்கு முடி உதிர்ந்துவிட்டது என்று ரஜினியே சொல்லியிருக்கிறார்.
கமலும் அப்படித்தான்: கமல் ஹாசனுக்கும் முடி உதிர்ந்துவிட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே சுதாரித்துக்கொண்ட அவர் வெளிநாடுக்கு சென்று தலைமுடியை தலையில் நடும் ட்ரீட்மெண்ட்டை எடுத்துக்கொண்டார். ரஜினிகாந்த் தனக்கு முடி உதிர்ந்ததை பற்றி கவலைப்படாமல் என்ன இருக்கிறதோ அதுனடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். ஆனால் விஜய் அப்படி இல்லை. விக் வைத்துக்கொண்டார். அதேசமயம் அஜித்துக்கு நன்றாகவே முடி இருக்கிறது.
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விக் வைக்காதீங்க: விக் வைப்பது ஒன்றும் பெரிய தவறு இல்லை. ஆனால் ஒரேமாதிரியான விக்கை வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விக்கை வைக்கக்கூடாது. சமீபத்தில் அவர் தனது ரசிகர்களை சந்தித்தபோதுகூட பெரிய டோப்பா முடியை மாட்டியிருந்தார். இதனால் அஜித் ரசிகர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் விஜய் ரசிகர்கள் திணறிக்கொண்டிருக்கின்றனர்” என்றார்.