நடிகை யாஷிகா ஆனந்த கொளுத்தும் வெயிலுக்கு இதமாக அருவியில் குளியல் போட ரெடியாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் மாடல் துறையில் இருந்து திரைத்துறையில் கால்பதித்துள்ளார்.
தனது கவர்ச்சிகரமான நடிப்பால் இன்றைய இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ள யாஷிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இருட்டு அறையில் முரட்டு குத்து : நடிகை யாஷிகா ஆரம்பத்தில் ஒருசில படங்களில் சிறு சிறு ரோலில் நடித்து வந்தார். அதன்பிறகு பெரிய படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். சந்தோஷ் பி இயக்கத்தில் வெளியானது இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற விவகாரமான கதையில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், யாஷிகாவுக்கு இதன்மூலம் பிரபலமானார்.
கோர விபத்து : தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன்பிறகும் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த போது, திடீரென விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் யாஷிகா இடுப்பு மற்றும் கால் எலும்புகள் உடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
தோழி உயிரிழந்தார் : அதோடு அவருடன் பயணித்த இரு ஆண் நண்பர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், இந்த கோரவிபத்தில், வள்ளி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் கோலிவுட்டில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. விபத்து நிகழ்ந்த போது யாஷிகா தான் காரை ஓட்டி வந்ததால், யாஷிகா மீது வழக்குப்பதிவு செய்தனர். இது சம்பந்தமான வழக்கு நடைபெற்று வருகிறது.

இணையத்தில் ஆக்டிவாக : இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டாக போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் வெயிலுக்கு இதமாக கவர்ச்சியாக அருவிக்கு அருகில் நின்று போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அருவியில குளிக்க மாட்டீங்களா என கேட்டுவருகின்றனர்.