திரிபோஷ உற்பத்தி நிறுவனத்திற்காக, இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி, குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிடிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, சோள இறக்குமதியின் போது சுமத்தப்பட்டுள்ள விசேட வர்த்தக வரி கிலோ ஒன்றிற்கு 75ரூபாவிலிருந்து 25 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவிஸ்ஸாவெல தல்துவ பிரதேசத்தில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகத்திற்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
கடந்த 18ஆம் திகதியிலிருந்து நடைபெறும் இந்த வரிக் குறைப்பு ஏனைய சோள இறக்குமதிக்காக நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறே திரிபோஷ உற்பத்திக்குப் போதுமானவாறு சோளம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் எந்த நேரத்திலும் இவ்வரி மீண்டும் அமுல்படுத்தப்படலாம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.