“நம்ப முடியாத உண்மை” – தன் இதயத்தை அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட உறுப்பு மாற்று சிகிச்சை பெற்ற பெண்

லண்டன்: இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவர் தனது இதயத்தை அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இங்கிலாந்தில் ஹாம்ப்ஷயரில் உள்ள ரிங்வுட்டைச் சேர்ந்தவர் ஜெனிஃபர் சுட்டன். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்னர் இருதய மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ஜெனிஃபருக்கு 22 வயதாகும்போது அவர் கார்டியோமயோபதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார்டியோபதி என்பது இதயத்திலிருந்து ரத்த உடலுக்கு பாய்வதை தடுக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வாறான சூழலில் ‘ஜெனிஃபர் இதே இதயத்துடன் இருந்தால் அவர் இறந்துவிடுவார்; அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை தேவை’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். எனினும், அவருக்கு பொருத்தமான இதயம் கண்டுப்பிடிப்பதில் சிக்கல் இருந்தது.

ஜூன் 2007-ல் ஜெனிஃபருக்கு பொருத்தமான இதயம் கிடைத்தது. ஆனால், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள ஜெனிஃபருக்கு பதற்றமாக இருந்தது. காரணம் ஜெனிஃபரின் தாய் இதய மாற்று அறுவை சிகிச்சையில்தான் உயிரிழந்தவர். எனினும், மருத்துவர்கள் அளித்த நம்பிக்கையால் ஜெனிஃபர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார். சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்தது. சிகிச்சைக்கும் பின்னர் தனது இதயத்தின் மூலம் உறுப்பு தானம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதனை அருங்காட்சியகத்தில் வைக்க மருத்துவர்களிடம் ஜெனிஃபர் அனுமதி கோரினார்

ஒப்புதல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து யில் ஜெனிஃபரின் இதயம் ஹோல்போர்னின் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இந்த நிலையில், பல வருடங்களுக்கு பின்னர் அருங்காட்சியகத்தில் உள்ள தனது இதயத்தை ஜெனிஃபர் பார்வையிட்டார்.

இதுகுறித்து ஜெனிஃபர் பேசும்போது, “இது நம்ப முடியாத உண்மை. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் 16 வருடங்கள் அற்புதமாக கழிந்துள்ளன. நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன். முடிந்த அளவு எனது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறேன். உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வுக்கு நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.