நாளை (23) நள்ளிரவு முதல் சாதாரண தரப் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புக்கள் நடத்த தடை

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 29ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 08ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

குறித்த பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நாளை (23.05.2023) நள்ளிரவு முதல் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.

மேலும், எதிர்பார்ப்பு வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், அவற்றை விநியோகித்தல், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் வினாக்களை விளம்பரப்படுத்துதல் போன்றனவும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

எவரேனும் ஒருவர் அல்லது அமைப்பு இவற்றை மீறினால், அது குறித்து பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் தலைமையகம் 011 2421111
பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு 119
பரீட்சை திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கம் 1911
பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறு கிளை 0112784208 / 011 2784537

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.